கோவிட்-19 வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு: 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைப்பு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், முன்னெச்ச ரிக்கை குறித்தும் தெளிவான திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும் பரவத் தொடங்கி யுள்ளது. நேற்றைய நிலவரப்படி 30 பேருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக் கும்படி அனைத்து மாநிலங்களுக் கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கோவிட்-19 வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை அழைத்து உடனடியாக கூட்டம் நடத்தப்பட வேண்டும். கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நட வடிக்கைகளில் அவர்களை ஈடு படுத்த வேண்டும். குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் குறித்த விவரங்கள், பரிசோதனைக் கூடங்கள், பாதிக்கப்பட்டவர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவதற்கான நெறி முறைகள், மருத்துவமனை மற்றும் அவசர வாகனங்கள் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டியவை குறித்தும் தெளிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோ ருக்கு தனி இடம் உருவாக்கி சிகிச்சை அளிக்க வேண்டும். கோவிட்-19 வைரஸ் ஒருவரிடமி ருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளை பார்க்க வருபவர்கள் என அனை வரும் கைகளை குறைந்தபட்சம் 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட கைகழுவும் திரவத்தை பயன் படுத்தி அடிக்கடி சுத்தப்படுத்து வதை உறுதி செய்ய வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்த மாவட்ட அளவில், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறையினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், காவல் துறை, வருவாய்த் துறையினர் மற்றும் மத்திய அரசின் ரயில்வே, விமான போக்குவரத்து, துறைமுகம் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவினரை கொண்ட குழுவை ஏற்படுத்தி, கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

சுவாசம் தொடர்பான சுகாதாரம் மற்றும் கைகளை சுகாதாரமாக வைத்திருத்தல், தரை, சுவர்களை சுகாதாரமாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப் பாக, தரைகள், சுவர்கள் என பொது மக்கள் கைபடும் இடங்களில் ஒரு சதவீதம் ஹைப்போகுளோரேல் திர வம் அல்லது 5 சதவீதம் லைசால் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பள்ளிகள், கல்லூரி கள், அரசு அல்லது தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலை கள், விடுதிகள், வணிக வளாகங் கள், திரையரங்குகள் ஆகியவற் றில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கண்காட்சி கூடங்கள், மாவட்ட ஆட்சியர் அலு வலகம், மக்கள் கூடும் இடங்களில் கோவிட்-19 வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மையங்கள் அமைக் கப்பட வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவமனை கள், தங்கும் மற்றும் உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண் டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர இடங்களில் கைகழு வும் திரவங்கள் போதிய அள வுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிராமப் புறங்களிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களை நேரடி யாக ஈடுபடுத்திக் கொண்டு, முன் னெச்சரிக்கை மற்றும் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளை தின சரி ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள், கோவிட்- 19 வைரஸ் தொடர்பாக அறிவுறுத் தப்பட்டுள்ள அறிகுறிகள் இருப் பவர்கள் குறித்தும், மருத்துவ உதவி கள் குறித்தும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல் படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை 044-29510400, 044-29510500 மற்றும் 94443 40496, 87544 48477 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 104 சேவை மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

வாழ்வியல்

12 mins ago

ஓடிடி களம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

57 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்