மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் 6 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

2014-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளதால், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, தேர்தலை நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது திமுக, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் இரண்டு கட்சிகளும் தலா 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி தலா 3 எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

41 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்