மாதவரத்தில் சோகம்; 4 வயது மகளுடன் 3-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்: இருவரும் பலி

By செய்திப்பிரிவு

மதுரவாயலில் இளைஞர் ஒருவர் தனது 4 வயதுப் பெண் குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்ததில் இருவரும் இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவரம், பொன்னியம்மன் மேடு, பொன்னுசாமி நகர் பிரதான சாலையில் வசித்தவர் திருப்பதி ரெட்டி (35). இவரது மனைவி டோனலெட்டி சுனிதா(26). இவர்களுக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 4 வயதிதில் ஹரிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளனர். திருப்பதி ரெட்டி, பாரிமுனையில் ஒரு பூண்டு குடோனில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.

திருப்பதி ரெட்டிக்கு மன அழுத்த நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக கடந்த இரண்டு வருடங்களாக மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பதி ரெட்டி வீட்டில் இருந்தார். மதியம் சுமார் 2 மணியளவில் திருப்பதி ரெட்டிக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மனைவி வீட்டு வேலையில் இருக்க, திடீரென திருப்பதி ரெட்டி தனது 4 வயது மகள் ஹரிகாவுடன் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். அது மூன்றாவது தளமாகும்.

மொட்டை மாடிக்குச் சென்றவர் திடீரென மகளுடன் மொட்டை மாடியிலிருந்து குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ஹரிகா உயிரிழந்தது. திருப்பதி ரெட்டி ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்தார்.

தந்தையும் மகளும் மாடியிலிருந்து குதித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

கணவரையும் மகளையும் பறிகொடுத்த மனைவி கதறி அழுதார். தகவலறிந்து வந்த மாதவரம் போலீஸார் இருவர் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரது மரணத்துக்கும் திருப்பதி ரெட்டியின் மன அழுத்த நோயே காரணம் என்று கூறப்படுகிறது. மகன் தாயுடன் இருந்ததால் தப்பித்துள்ளார். இல்லாவிட்டால் மகனையும் திருப்பதி ரெட்டி உடன் அழைத்துச் சென்றிருப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவரம் போலீஸார் ஐபிசி பிரிவு 174 சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

46 mins ago

வாழ்வியல்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்