பல லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் அறிவிக்கப்பட்ட கபடி போட்டிக்கு போலீஸார் அனுமதி மறுப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பல லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் அறிவிக்கப்பட்ட கபடி போட்டிக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் கிராமமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூரில் ராணுவவீரர் புவனேந்திரன் நினைவு தினத்தையொட்டி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 9-ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி பிப்.19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் அதே மதிப்புள்ள வெற்றிக் கோப்பையும் அறிவிக்கப்பட்டது.

தவிர சிறப்புப் பரிசுகளாக தங்கக் காப்பு, டிவி, பிரிட்ஜ், மொபைல், கிடா உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்பட்டன.

இதனால் மாநிலம் முழுவதும் இருந்தும் ஏராளமான அணிகள் பதிவு செய்தன. இந்நிலையில் போட்டி நடத்த திடீரென போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த இளைஞர்கள், கிராமமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கபடி போட்டி நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர். மேலும் போட்டி தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இளைஞர் மன்றத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்