இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: தனுஷ்கோடியில் இலங்கை, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வந்த ரூ.1.50 கோடி திப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானதள கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது இந்திய கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருந்த இலங்கை பைபர் படகை கண்டறிந்தனர். பின்னர் தாழ்வாகப் பறந்து அந்தப் படகை அரிச்சல்முனைக்கு கொண்டு வந்தனர்.

படகையும், அதில் இருந்த இலங்கை மன்னாரைச் சேர்ந்த மீனவர்கள் அலோசியஸ், அந்தோணி சுகந்த், சகாய வினிஸ்ரோ ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். இதில், மீனவர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்து, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 4 மீனவர்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தனர்.

அதையடுத்து ராமநாதபுரம் சிறப்புக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை செய்தனர். அப்போது, தாங்கள் வந்த படகின் உட்பகுதியில் இலங்கையில் இருந்து கடத்தி வந்த 3.5 கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்தனர். அதையடுத்து போலீஸார் அந்தப் படகை உடைத்து 100 கிராம் எடையுள்ள 35 தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த எடை 3.5 கிலோ. இதன் மதிப்பு ரூ.1.48 கோடி.

மேலும் இலங்கை மீனவர்கள் தங்கத்தை ஒப்படைக்க இருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தியோனி, தனுஷியஸ், ராமேசுவரத்தைச் சேர்ந்த லட்சுமணன், சர்வேஸ்வரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் நேற்று பிடித்தனர். போலீஸார் பறிமுதல் செய்த தங்கத்தையும், இலங்கை மற்றும் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் ராமேசுவரம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். சுங்கத் துறையினர் 7 மீனவர்களையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கை கடல் பகுதியில்

இலங்கை நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகத்துக்கு இடமாகச் சென்றஇலங்கை பைபர் படகை அந்நாட்டுக் கடற்படையினர் சோதனைசெய்தனர். அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள 14.35 கிலோ தங்கத்தையும், படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். படகில் இருந்த 2 இலங்கை மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்