சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு: தொகுதி வாரியாக முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2020 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2020 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், இன்று (14.02.2020) அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2020-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்டன.

ஜன. 01.2020 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 23.12.2019 முதல் 22.01.2020 முடிய பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டப்பேரவைத் தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்கான இறுதிப் பட்டியல் மற்றும் துணைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியல்கள் இன்று (14.02.2020) வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும், www.elections.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்.

1. ஆண்கள் 19,15,718
2. பெண்கள் 19,71,966
3 இதரர் 989
மொத்தம் 38,88,673

2020-ம் ஆண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக 65,215 பெயர் சேர்த்தல் மனுக்கள்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

அதன் விவரம்:

1. ஆண்கள் 31,158
2. பெண்கள் 34,031
3 இதரர் 26
மொத்தம் 65,215

மேற்படி பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு துணை பட்டியல்களில் பெயர்கள்
சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 59,905.

அதன் விவரம்:

1. ஆண்கள் 28,728
2. பெண்கள் 31,151
3 இதரர் 26
மொத்தம் 59,905

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள ஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக் கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 3,384 ஆகும்.

அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களின் விசாரணைக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,786 ஆகும். மேலும் எந்தப் பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக (SUOMOTTO) நீக்கம் செய்யப்படவில்லை. அவ்வாறு வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்கள்

1. ஆண்கள் 890
2. பெண்கள் 894
3 இதரர் 2
மொத்தம் 1,786

இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட 58,119 கூடுதல் என்றும், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைவிட 1.49 சதவீதம் கூடுதல் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

16 சட்டப்பேரவை வாக்காளர்கள் விவரம்:

இந்த சுருக்கமுறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 19,686 ஆகும்.

இதில் அதிகபட்சமாக எண் 26, வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,06,347 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக எண் 18, துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,73,337 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் .பி.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) .பெருமாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

11 mins ago

வாழ்வியல்

20 mins ago

ஓடிடி களம்

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்