பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

பீடித் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இன்று கையெழுத்தானது.

இது தொடர்பாக தொழிலாளர் நல ஆணையரகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பீடித் தொழில் துறையில் தொழில் அமைதி நிலவும் பொருட்டும், நல்லுறவு ஏற்படும் வகையிலும் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் மாநில அளவிலான பீடித்தொழிலாளர்களுக்கென முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 10-ம் தேதி ( திங்கள்கிழமை) நடத்தப்பட்டது.

அப்போது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வூதிய ஒப்பந்தத்தில் தமிழ்நாடு பீடித் தொழிலாளர் தொழிற்சங்கங்களும், தமிழ்நாடு பீடி உற்பத்தியாளர் சங்கங்களும் கலந்து கொண்டு தொழிற் தகராறு சட்டம் பிரிவு 12(3)-ன் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தப்படி அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தின்படி தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 95 கூலியினை வரும் 15-08-2015 முதல் 1000 பீடி சுற்றுவதற்கு ( சாதா பீடி மற்றும் ஜாடி பீடி) ரூ 12 அதிகப்படியாக பெறுவார்கள். இந்த ஒப்பந்தம் 15-08-2015 முதல் 15-05-2019 வரை அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தால் 4 லட்சம் பீடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்