ஹைட்ரோகார்பன் திட்டம்: மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்; விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் சாதக, பாதகங்களை விளக்கி மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை அவசியம் பெற வேண்டும். மேலும், கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பழைய விதிமுறைகளைத் திருத்தி மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. மேலும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜன.21) விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி விளக்கம் கொடுக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

30 mins ago

ஓடிடி களம்

44 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்