கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ ரூ.45 ஆக குறைந்தது

By செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பெரிய வெங்காயம் அதிகம் விலை யும் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவம் தவறிய மழை பெய்தது. அதன் காரணமாக பெரிய வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விலை கடுமையாக உயர்ந்தது.

இதற்கிடையில், மத்திய அரசு எகிப்திலிருந்து வெங்காயம் இறக் குமதி செய்ததைத் தொடர்ந்து அதன் விலை குறைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தற்போது வெங்காய வரத்து அதிகரித்துள் ளது. அதன் காரணமாக கடந்த வாரம் ரூ.55-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான தக்காளி ரூ.20, சாம்பார் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.33, அவரைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.35, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.45, பீட்ரூட் ரூ.18, புடலங்காய் பச்சை மிளகாய் ரூ.22, முருங்கைக்காய் ரூ.160 என விற்கப்பட்டு வருகிறது.

வெங்காய விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும் போது, ‘‘தற்போது எகிப்து வெங் காயம் மட்டுமல்லாது, வெளி மாநில வெங்காயமும் வந்துக் கொண்டிருக்கிறது. அதன் காரண மாக விலை குறைந்து வருகிறது. வெளி மாநில வெங்காய வரத்து அதிகரித்து வருவதால், அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 mins ago

விளையாட்டு

12 mins ago

ஜோதிடம்

41 mins ago

தமிழகம்

31 mins ago

விளையாட்டு

50 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்