பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

By செய்திப்பிரிவு

பெண்ணைத் தாக்கி மிரட்டல்விடுத் ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

சென்னை காமராஜர் அரங்க ஊழியராக இருந்த வளர்மதி என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை மேலாளர் நாராயணன் ஆகியோர் தன்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தேனாம்பேட்டை போலீஸார் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய் திருந்தனர்.

பின்னர் சென்னை உயர் நீதிமன் றத்தில் இளங்கோவன், நாராய ணன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த னர். அவர்கள் இருவருக்கும், மதுரையில் தங்கியிருந்து தல்லா குளம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண் டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இளங்கோவன், நாராயணன் ஆகியோர் நேற்று ஆஜராகி, நீதிபதி சிவசுப்பிரமணியன் முன்பு சரணடைந்தனர். பின்னர் உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையின்படி, 2 வாரங் களுக்கு மதுரையில் தங்கி, தல்லாகுளம் காவல்நிலையத் தில் தினமும் கையெழுத்திட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்