ஜேஎன்யு தாக்குதல்: மாணவர் சங்கத் தலைவருக்கு கனிமொழி நேரில் ஆறுதல்; தீபிகா படுகோனேவுக்கும் ஆதரவு

By செய்திப்பிரிவு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக ஆதரவு ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை, ஜேன்என்யு பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து, கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கனிமொழி, "நான் இந்தி திரைப்படங்களை அதிகம் பார்க்க மாட்டேன். தீபிகாவுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம், என்னைப் போன்றவர்களை, தீபிகாவின் படங்களைப் பார்த்து அவரை ஆதரிக்க வழிவகுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்