94 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அமமுக வெற்றி

By செய்திப்பிரிவு

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 94 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர், 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று உள்ளது. திமுகவைவிட சற்று குறைவான இடங்களில் அதிமுக கூட்டணி வென்றுள்ளது.

அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர அமமுக, நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் கண்டன. இதில் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட் டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் உறுப்பினர் பதவியைப் பிடித்துள்ளது.

அமமுக 94 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளைப் பிடித்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 14, தஞ்சை 10, சிவகங்கை 8, மதுரை 7, திருவண்ணாமலை 6, ராமநாத புரம், கடலூர், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 5 இடங்களில் அமமுக வென்றுள் ளது. கரூர், கன்னியாகுமரி, திருப் பூர் ஆகிய 3 மாவட்டங்களில் அமமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

டிடிவி. தினகரனால், அமமுகவை தொடங்கி மக்களவை தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை.

இதனால் அதன் பிறகு நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை.

தற்போது அமமுகவை அரசியல் கட்சியாக தினகரன் பதிவு செய்துள் ளார். அதன்பிறகு அமமுக சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் 94 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைப் பிடித்துள்ளது. எனினும், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களைக்கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்