உயர் மருத்துவக் கல்வியில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை இழந்துவிட்டோம்: வைகோ விமர்சனம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது, இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிப்ளமோ கல்வியில் இட ஒதுக்கீடு 69 சதவீத இட ஒதுக்கீட்டை இழந்துவிட்டோம். என வைகோ தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

"தமிழக அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிப்ளமோ கல்வியில் இட ஒதுக்கீடு 69 சதவீதம் இதுவரை வழங்கப்பட்டு வந்ததை கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்துள்ளோம்.

அதற்கு காரணம் தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி வகுக்காமல், தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் வஞ்சகம் செய்துள்ளது.

எத்தகைய ஒரு பாசிச போக்கு இருக்கிறது, நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது என்கிறபோது இந்த அரசுக்கு நிர்வாகத்திலே சிறப்பிடம் கொடுத்திருப்ப்ந்தாக அரசு சொல்வது தமிழகத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகச் சீர்கேடு இங்கு இருக்கும்போது, இந்த அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து மதிமுகவும் வழக்கு தொடர்ந்து உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் முலமாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்.

ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள பிபின் ராவத், இதுவரை எந்த ராணுவ தளபதியும் சொல்லாத அரசியல் கருத்தை சொல்வது ஆபத்தானது. ராணுவ தளபதி பேசியதை திரும்பப் பெற வேண்டும்”.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

43 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்