100 அடிக்கு மேல் 100 நாட்கள்: கடல்போல காட்சியளிக்கும் ஆழியாறு அணை

By செய்திப்பிரிவு

ஆழியாறு அணையின் நீர்மட்டம், 100 நாட்களுக்கு மேலாக 100 அடிக்கு மேல் நிரம்பி உள்ளதால், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கியஅணையாக உள்ளது. ஆனை
மலை கரவெளியில் உள்ள பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்களும், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டுப் பாசனத்தில் 42000 ஏக்கர் நிலங்களும், இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன. பிஏபி பாசனத் திட்ட ஒப்பந்தப்படி, இந்த அணை வழியாக, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர் தாலுகா பகுதிக்கு பாசனத்துக்
கும், குடிநீர்த் தேவைக்கும் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இதைத்தவிர பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள
குடிநீர்த் திட்டங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால், அணையின் நீர்இருப்பு குறைந்து பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்பட்ட கரவெளி பகுதியில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி நடைபெற்றது.கடந்த ஜூலை மாதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை குன்றுகளில் பெய்த தென்மேற்குப் பருவமழையால் பிஏபி திட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மளமள என உயர்ந்தது. 120 அடி கொள்ளளவு உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி 101.90 அடியை எட்டியது. அதிகபட்ச கொள்ளளவு அளவை எட்டியதால் அணையின் பாதுகாப்புக்காக அவ்வப்போது அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

அதன்பின் மழையளவு குறைந்தாலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அருவி, சிற்றோடைகள் வழியாக அணைக்கு நீர்வரத்து சீராக இருந்ததால், அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 110 அடியானது. கடந்த மாதம் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மழை மற்றும் மண்ணில் உள்ள ஈரப்பதம் காரணமாக விவசாயி களின் கோரிக்கையை ஏற்று புதிய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. எனினும் கடந்த 100 நாட்களாக அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் அணை நிரம்பி கடல்போல காட்சியளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, நீர்மட்டம் 115.60 அடியாக உள்ளது. விநாடிக்கு 148 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 594 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆழியாறு அணை மற்றும் அங்கிருந்து தொடங்கும் ஆற்றஆதாரமாகக் கொண்டு, கோட்டூர் பேரூராட்சி, அங்கலகுறிச்சி, கம்பாலபட்டி ஆகிய குடிநீர்த் திட்டங்களும், ஆனைமலை பகுதியில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளின் குடிநீர்த் திட்டங்களும், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமந்துறை சித்தூர், ரமணமுதலியபுதூர், பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி நகராட்சி மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான 13 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பொள்ளாச்சி நகரம் மற்றும் குறிச்சி- குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் பல லட்சம் பேரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போதைய நீர் இருப்பால் வரும் கோடைகாலம் வரை ஆழியாறு ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்