மதுரை - போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: உசிலம்பட்டி வரை பணிகள் நிறைவு

By செய்திப்பிரிவு

மதுரை போடிநாயக்கனுர் அகல ரயில்பாதையில் முதல் கட்டமாக மதுரையிலிருந்து -உசிலம்பட்டி வரையிலான ரயில் பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை-போடி இடையே கடந்த 2010-ம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. பின்னர் இந்த வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றுவதற்காக ரயில் கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.

ஆனால் மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததால் பல ஆண்டுகள் பணி நடைபெறாமல் இருந்தது. கடந்த இரண்டு பட் ஜெட்களில் இத்திட்டத்துக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

தென் மாவட்ட எம்.பி.,க்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் பொதுமக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை எடுத்துச் சொல்லி விரைவில் பணியை முடிக்க வேண்டும் என்ற கோரி வந்தனர். இதனையடுத்து மதுரை போடிநாயக்கனுர் ரயில் பாதைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை-உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டி-போடி என இரு பிரிவுகளாகப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை-போடி அகலப் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக 37 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை-உசிலம்பட்டி இடையேயான பணிகள் முடிவடைந்தன.

நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி, பல்கலைகழகம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் பாலம் அமைக்கப்பட்டு இறுதி கட்ட வேலைகள் முடிவடைந்தன.

இதனையடுத்து மதுரையிலிருந்து _உசிலம்பட்டி வரையிலான அகல ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

12 mins ago

வாழ்வியல்

21 mins ago

ஓடிடி களம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்