புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்: 4 பேர் உயிருடன் மீட்பு - மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கல் லூரி மாணவர் கடலில் மூழ்கி மாய மானார். 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் சூர்யா (18). இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் (18), ரமேஷ் மகன் விஜய் (19), சுப்பிரமணி மகன் கோவர்த்தன் (19), ஆனந்த் (18) உள்பட 14 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கலை அறிவி யல் கல்லூரியில் படித்து வருகின் றனர்.

முத்தியால்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியி ருந்த அவர்கள் புதுச்சேரியில் பல் வேறு இடங்களை சுற்றிப் பார்த்த னர். நேற்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே சூர்யா, கோவர்த்தன், ஆனந்த், விஜய், மற்றொரு விஜய் ஆகிய 5 பேர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நீச்சல் தெரியா ததால் 5 பேரும் கடலில் மூழ்கினர். இதனால் உடன் வந்தவர்கள் கூச் சலிட்டனர்.

இதையடுத்து புதுச்சேரி தீய ணைப்பு நிலையத்துக்கும், பெரிய கடை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய ணைப்பு நிலைய அதிகாரி மனோக ரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அப்பகுதி மீனவர்கள், நீச்சல் தெரிந்த இளை ஞர்களின் உதவியுடன் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சூர்யா, விஜய், மற்றொரு விஜய், ஆனந்த் ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். மாணவர் கோவர்த்தன் மாயமானார். அவரை தேடும் பணி யில் தீயணைப்பு வீரர்களும், போலீ ஸாரும் தொடர்ந்து ஈடுபட்டனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் உள்ள செயற்கை மணல் பரப்பு கடல் பகுதியில் குளிப்ப துண்டு. இவர்களில் சிலர் மது போதை மற்றும் உற்சாக மிகுதி யால் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க ஒப்பந்த அடிப்படையில் நீச்சல் தெரிந்த லைப்கார்டு எனப்படும் மீட்புக் குழுவினர் 18 பேர் பணிய மர்த்தப்பட்டனர். அவர்கள் ஷிப்ட் முறையில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊதிய பிரச்சினை காரணமாக கடந்த 2 வார மாக அவர்கள் பணியில் இல்லை.

மேலும், கடலோர காவல்படை வீரர்கள் 2 பேர் தலைமை செயலகம் எதிரே இருப்பார்கள். நேற்று அவர்க ளும் பணியில் இல்லை. பெரியக் கடை காவல் நிலைய போலீஸாரும் நேற்று பணியில் இல்லை என பொதுமக்களும், சுற்றுலா பயணிக ளும் குற்றம் சாட்டினர்.கோட்டக்குப்பம் அருகே

கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரூ கிரி நகரில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வரும் தீபு (26), சகானா (25), பவித்ரா (24), தனுஷ் (24) ஆகியோர் நேற்று அதிகாலை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மது அருந்தியுள்ளனர். பின்னர் கோட்டக்குப்பம் அருகே தந்திராயன்குப்பம் கடலில் குளித்துள்ளனர். இதில் 4 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள் 4 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபு உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்