விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்: சிறப்பு நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான 2 அவதூறு வழக்குகள் அரசு தரப்பில் வாபஸ் பெறப்பட்டதால் சிறப்பு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி முன்ன றிவிப்பு இன்றி திறக்கப்பட்டது தான் வெள்ளப் பாதிப்புக்குக் காரணம் என்றும், இதற்கு அப் போதைய முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக விஜய காந்த் மீது தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதேபோல அப்போதைய முதல் வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக மற்றொரு அவதூறு வழக்கும் விஜயகாந்த் மீது தொடரப்பட்டது.

இந்த 2 அவதூறு வழக்குகள் விசாரணை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் விஜயகாந் துக்கு எதிரான இந்த 2 அவதூறு வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதுதொடர் பான அரசாணை, சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்த் மீதான 2 அவதூறு வழக்குகளையும் முடித்து வைத்து நீதிபதி லிங் கேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்