அரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியிடமே ஏன் நிவாரணம் வசூலிக்க கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி 

By செய்திப்பிரிவு

கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை என போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார்..

அரசியல் கட்சி பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த குடும்பதிற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ஏன் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்