தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன்

மதுரை

தென்காசிக்கு பதில் சங்கரன்கோவிலை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.

இது தொடர்பாக சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என 2005-ல் இருந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்த கோரிக்கை தொடர்பாக அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் நவ. 12-ல் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தென்காசியை மாவட்டமாக அறிவிப்பதற்கு முன்பு அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை, தொலைவு, போக்குவரத்து வசதி, மக்கள் நலன் உள்ளிட்டவை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் ஆலோசிக்கவில்லை.

எனவே தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

12 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்