நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்தவரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்தவர் சரவணன். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரவணன், அவரது மகனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சரவணன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் எனது மகன் நீட் தேர்வில் 130 மதிப்பெண் பெற்றார். அவரை தனியார் கல்லூரியில் ரூ.22.60 லட்சம் செலுத்தி எம்பிபிஎஸ் சேர்த்தோம். இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எங்களை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சரவணனுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்தார். இதையடுத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்