தமிழகத்தில் பிரிக்கப்பட்ட, புதிய மாவட்டங்களின் தொகுதி மறுவரையறைக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம் - டிச.13-க்கு விசாரணை தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட் டுள்ள 5 மாவட்டங்களுடன் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரை யறைப் பணிகளை முழுமையாக முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை டிசம்பர் 13-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அந்த தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. ஆனால், அதன்பிறகு கடந்த 3 ஆண்டு களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படவில்லை. இதையடுத்து, ‘தேர்தல் நடக்காததால் உள்ளாட்சி அமைப்பு கள் முடக்கமடைந்துள்ளன. தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர் தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜூலையில், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் வார்டு மறுவரை யறை மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவ தால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப் பாணையை வெளியிட அக்.31 வரை அவகாசம் தேவை’ என மாநில தேர் தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதையடுத்து அக்.31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர் தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் புதிதாக மனு தாக்கல் செய் தது. அதில், ‘ஹரியாணா, மகாராஷ் டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணை யத்திடம் இருந்து பெறுவதில் இடர்பாடுகள் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறியாளர் களைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக சோதனை நடத்த வேண் டும். எனவே, தேர்தல் அறிவிப் பாணை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும்’ என கூறப் பட்டிருந்தது. இதை எதிர்த்து வழக் கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன் றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி நேரில் ஆஜராகியிருந்தார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆஜ ராகி, ‘‘ஹரியாணா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை குறித்த நேரத் துக்குள் வெளியிட முடியவில்லை. தற்போது அனைத்துப் பணி களையும் முடித்துவிட்டோம். டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத் தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

அப்போது திமுக தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர், ‘‘ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு வேறு ஒரு அமர்வில் நிலுவையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு என 5 மாவட் டங்கள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளன. இதனால் இந்த 5 மாவட் டங்களுடன் சேர்த்து ஏற்கெனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் என மொத்தம் 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரை யறைப் பணிகள் உள்ளிட்ட அனைத் துப் பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக சட்டப்பூர்வ மாக முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண் டும். இந்த வழக்கோடு நாங்கள் தொடர்ந்த வழக்கையும் சேர்த்து விசா ரிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணை யம் விடுத்த கோரிக்கையை ஏற் கிறோம். எனவே, மாநில தேர்தல் ஆணையம் வரும் டிச.13-ம் தேதிக் குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அனைத்து பணிகளையும் சட்டப் பூர்வமாக முடித்து அறி விப்பாணையை வெளியிடும் என நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பான அறிக்கையை அன் றைய தினம் மாநில தேர்தல் ஆணை யம் தாக்கல் செய்ய வேண்டும்.

திமுக தரப்பில் தாக்கல் செய்யப் பட்டு ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் இந்த வழக்கு என அனைத்தையும் ஒன்றாக விசா ரிக்கும் வகையில் உரிய அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்’’ எனக்கூறி, வழக்கு விசாரணையை டிச.13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்