அதிமுகவை வீழ்த்த உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் அமமுக போட்டியிடும்: டிடிவி தினகரன் பேட்டி

By அ.அருள்தாசன்

நெல்லை

உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

ஆதலால், உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் அமமுக போட்டியிடும். எதிரிகளை வீழ்த்தி உள்ளாட்சியில் வெற்றிபெறுவது அமமுகவின் கடமை.
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அமமுக போட்டியிடும். அதிமுகவை தோற்கடிப்பதும், நாங்கள் வெற்றிபெறுவதும் இலக்கு.

வரும் 22-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மனுக்கள் பெறப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்