பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: உபரிநீர் வெளியேற்றத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித் துள்ளதால், பவானி ஆற்றில் அதிக அளவு உபரிநீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை யில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அணைக்கு நீர்வரத்து குறைந்த தால், அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக நேற்று மாலை முதல் மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7624 கனஅடியாக இருந்த நிலையில், இது படிப்படியாக அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து அணை யிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரத்து 900 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2100 கனஅடி நீர் என மொத்தம் 17 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பவானி ஆற்றில் அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டுள் ளதால்,வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் பவானி ஆற்றங் கரையோர பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியை மேற்கொண்டுள் ளனர். அணையின் மேல்பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு, நீர்வரத்து குறித்த நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்