போராட்டத்தால் பணிக்கு வராத நாட்களில் டாக்டர்களுக்கு சம்பளம் கிடையாது: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத நாட்களில் அரசு டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் 4,500-க் கும் மேற்பட்ட டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ் கரின் வேண்டுகோளை ஏற்று கடந்த 1-ம் தேதி போராட்டத்தை வாபஸ் பெற்று அனைவரும் பணிக்கு திரும்பினர்.

இதற்கிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க் கும் மேற்பட்ட டாக்டர்கள் இடமாற் றம் செய்யப்பட்டனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட டாக்டர்களை இடமாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின் றனர்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் களுக்கு, பணிக்கு வராத நாட் களில் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளி கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டாக்டர்கள் பணிக்கு வராத நாட்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிக்கு வராத நாட்களில் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்