ராமஜென்ம பூமி, கதிர்காமம் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் விமானத்தில் ’ராமாயண’ சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை

ஐஆர்சிடிசி நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரிகளுக் கான கல்வி சுற்றுலா, கார் போக்கு வரத்து சேவைகள் போன்றவற்றை இந்திய உணவு, சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நடத்தி வருகிறது. இந்த சுற்றுலா திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத் துள்ள நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ராமாயண காவியத்தில் இடம்பெற்றுள்ள இடங்களை காணும் வகையில் தமிழகத்தில் இருந்து ரயில், விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு யாத்திரை ரயில் வரும் 16-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக உத்தரப் பிரதேசம் செல்கிறது. பின்னர், அங்குள்ள ராம்காட், ஆல யங்கள் தரிசனம் (அயோத்தி காண்டம், பாலகாண்டம்), பிரம் மேஸ்வர நாதர் சிவாலய தரிசனம், ராமஜென்ம பூமி தரிசனம், சீதாமார்தி தரிசனம் ஆகியவை இந்த சுற்றுலாவில் அடங்கும்.

இந்த 13 நாள் யாத்திரையில் ரயில் பயணக் கட்டணம், சைவ உணவு, ஊர்களை சுற்றிப் பார்க்க வாகன வசதி, தங்கும் இடம் உட்பட ஒருவருக்கான கட்டணம் ரூ.14,720 ஆகும்.

இதேபோல, சென்னையில் இருந்து வரும் 29-ம் தேதி விமானத் தில் புறப்பட்டு இலங்கையில் கொழும்பு, கண்டி, நுவரேலியா மற்றும் கதிர்காமத்தில் ராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்களைக் காண 6 நாள் விமான சுற்றுலா வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. விமான கட்டணம், உணவு, தங்கும் இடம் உட்பட ஒருவருக் கான கட்டணம் ரூ.39,900. இது குறித்து மேலும் தகவல்களுக்கு 9003140680, 9003140681 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்