கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல் ஓவியங்கள் கண்டுபிடிப்பு 

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி 

‘தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக் கீறல் ஓவியங்கள், வேப்பனப்பள்ளி அருகே உள்ளன’ என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப் பனப்பள்ளி அருகே நக்கநாயன பண்டா என்ற இடத்தில் உள்ள மலையில், காப்பாட்சியர் கோவிந் தராஜ் தலைமையிலான குழுவினர் மற்றும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அங்கு 3 இடங்களில் பாறையில் வரையப்பட்டுள்ள கீறல் ஓவியங்களை ஆய்வு செய் தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 2 கிமீ தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்கிற இடம் உள்ளது. இவ்விடத்தில் உள்ள 3 பாறை களில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின்றன. பாறை ஓவியங் களும், பாறைக்கீறல்களும், வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத்தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ண கிரி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டதுபோல், தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய அதா வது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட் டுள்ளது.

இங்கிருந்து 50 அடி தொலை விலேயே பெருங்கற்படைக் காலத்தை சேர்ந்த கற்திட்டைகளும் காணப்படுவதால், இப்பெரிய பாறைக்கீறலின் காலத்தையும் பெருங்கற்படைக்காலம் என தீர் மானிக்கலாம். இக்கால ஓவியங் களில் உருவங்கள், ஒற்றை கோட் டால் வரையப்பட்டிருக்கும். ஆனால், இக்கீறல் உருவமோ இரட்டைக் கோட்டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத் தில் கீறப்பட்டுள்ளது. இவை ஒவ் வொன்றும் 6 அடி உயரத்தில் உள்ள தாய் தெய்வத்தின் வடிவமாக இருக்கலாம்.

இருபுறம் சடையும், உடலின் அமைப்பும் கத்தரி போலவும் உள் ளது. தெய்வத்தின் இருபுறமும் இரு சிற்றுருவங்கள் வரையப்பட் டுள்ளன. இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என அதன் அமைப்பை வைத்து சொல்லலாம். தலையும், கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும், உடல் கத்தரிக்கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டுள்ளது. மூன்றாவது பாறையில் உள்ள உருவம் இவை போன்றே இருந் தாலும், அது மிகவும் தேய்ந்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ கத்தில் இதுவரை அறியப்பட்ட பாறைக் கீறல்களில் இதுவே பெரியதாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்