கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடியில் புதிய அருங்காட்சியகம்: ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்த, சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் ரூ.12 கோடியே 21 லட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

‘‘இந்த ஆண்டு முதல் நவம் பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும்” என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது முதல்வர் பழனிசாமி அறி வித்தார். அதன்படி, தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில் முதல்முறையாக தமிழ்நாடு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங் கில் காலை, 10.30 முதல் மாலை 4 மணிவரை நடந்த விழாவில் ‘செயல் செய்வாய் தமிழுக்கு துறை தோறும்..’ என்ற தலைப்பில் கவிய ரங்கம், ‘அன்பு பதிந்த இடம்.. எங் கள் ஆட்சி பதிந்த இடம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், ‘எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே’ என்ற தலைப்பில் இளையோர் அரங்கம் மற்றும் மரபு நிகழ்த்துக் கலை நிகழ்ச்சிகள், தேனிசை செல்லப்பா வின் தமிழ் இன்னிசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

இதைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு விருதுகளை வழங் கினார். முன்னதாக கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட் டிருந்த மாநில அளவிலான ஓவிய, சிற்பக் கண்காட்சியை முதல் வர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சி யின்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வின் சில பகுதிகள் இணைந்து ‘பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கி லத்திலும், ‘மதராஸ் மாகா ணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. நாடு விடுதலை அடைந்த பின், 1956-ம் ஆண்டு மாநில எல்லைகள் மறுவரையறை சட்டத்திருத்தம் மூலம் தமி ழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளை உள் ளடக்கி ‘மதராஸ் மாநிலம்’ உருவாக்கப்பட்டது.

அவ்வாறு உருவாக்கப் பட்ட மதராஸ் மாநிலத்துக்கு தமிழ் நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்து இன்னுயிரை ஈந்து இந்தக் கோரிக்கைக்கு வித்திட்டார்.

அதன்பின், நம் மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைக்கும்படி மாநிலங்களவையில் பல ஆதாரங் களை எடுத்துவைத்து முன் னாள் முதல்வர் அண்ணா உரை யாற்றினார். பிறகு தமிழக முதல் வராக அண்ணா பொறுப்பேற்ற நிலையில், மத்திய அரசின் ஒப்பு தலைப் பெற்று 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாடு என்று நம் மாநிலத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

கடந்த ஜனவரி 14-ம் தேதி நம் மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரு டன் 50-வது ஆண்டில் அடியெ டுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ் நாடு பொன்விழா ஆண்டு நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது. இனி ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும். தமிழகத்தின் பெருமை பற்றியும் மொழியின் தொன்மை பற்றியும் அனைவரும் நினைவுகூரும் வகையில் இந்த விழா அமையும்.

கீழடி அகழாய்வில் கண் டெடுக்கப்பட்ட தொல்பொருட் களை காட்சிப்படுத்துவதற்காக, சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் வட்டம் கொந்தகை கிராமத் தில் ரூ.12 கோடியே 21 லட்சம் செலவில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதன்மூலம் தமிழர்களின் பண் டைய பண்பாடு, தொன்மை குறித்து மக்கள் அறிந்துகொள்ள தமிழக அரசு வழிவகை செய்யும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் பேசும்போது, ‘‘தமிழகத்தின் எல்லைக்காக தங்கள் இன்னுயிரை துச்சமாக எண்ணி போராடிய எல்லைக் காவலர்கள்,மொழிக்காக உழைத்த வீர பெருமக்களை போற்றிப் பாராட்டும் திருநாளாக, தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களுக்காக பணியாற்றுவதையே தனது உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் அன்றும், இன்றும், என்றும் மக்கள் நலப்பணியில் பின்வாங்காது, விசு வாசத் தொண்டர்களாகிய நாங்கள் களப்பணியாற்றிக் கொண்டிருக் கிறோம். தமிழகத்தின் முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு தமிழ்ப் பணிகளையும், தமிழ் மக்களுக்கான நலப்பணிகளையும் கடமை உணர் வுடன் மேற்கொள்வோம். தமிழர் நலம் காக்க என்றும் உழைப்போம்’’ என்றார்.

தமிழ் பண்பாட்டுத் துறை அமைச் சர் கே.பாண்டியராஜன் முன்னிலை உரையாற்றினார். கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர் கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தலைமைச் செயலர் கே.சண்முகம், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்