வள்ளியூர் இளைஞர் கொலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளி யூரில் இளைஞரை கொலை செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வள்ளியூர் யாதவர் நடுத்தெரு வைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் பகவதி (27). சமையல் தொழிலாளி யாக இருந்தார். கடந்த 2008 ஏப்.23-ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வள்ளி யூர் பேருந்து நிலையம் பகுதியில், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பாண்டி (35), பகவதியை வழிமறித்து தகராறு செய்து உள்ளார். பகவதியை சிலர் கடத்திச் சென்று, அங்குள்ள ரயில் நிலையம் அருகே ஓரினச்சேர்க்கை யில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ள னர். பகவதி மறுப்பு தெரிவித்ததால் அவர் வெட்டிக்கொலை செய்யப் பட்டார். உடல் குழிதோண்டி புதைக் கப்பட்டது.

இதுகுறித்து பகவதியின் சகோதரி சுப்புலட்சுமி வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, முத்துப் பாண்டி (35), லட்சுமணன் (34), முத்துக்கிருஷ்ணன் (35), அய்யப் பன் (26), சுரேஷ் (35), கணேசன் (26), சிவா (36), சுல்தான்(40) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஆட்டோ ஓட்டுநர்கள்.

திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற் றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்ப ளித்தார். இவ்வழக்கு நிலுவையில் இருந்தபோது குற்றம்சாட்டப்பட்ட லட்சுமணன் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்