ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர் அவலமாகி வருகிறது: கமல் ட்வீட்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் 40 மணி நேரத்திற்கு மேலாக கடுமையாகப் போராடி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுதும் இந்தத் துயரம் தீபாவளி நாளன்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று அனைவரும் சமூகவலைத்தளங்களில் தொலைக்காட்சி லைவ் சாட்களில் பிரார்த்தனையுடன் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபலங்களும் இது குறித்த தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகரும் மக்கள் நீதிமையக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

56 mins ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

25 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்