சித்திரை ஆட்ட திருநாள்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடைதிறப்பு

By என்.கணேஷ்ராஜ்

தேனி

திருவாங்கூர் மகாராஜா பிறந்தநாளுக்காக (சித்திரை ஆட்ட திருநாள்) சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை(அக்.25) நடைதிறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத இறுதிநாளில் நடைதிறக்கப்படுவது வழக்கம். இதுதவிர பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ, பிரதிஷ்டை தினம், திருவோணம் போன்ற சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருவாங்கூர் மகாராஜாவின் பிறந்தநாளைக்காக ஐப்பசியில் ஒருநாள் நடைதிறக்கப்படுவது வழக்கம். இது சித்திரை ஆட்ட திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

இதற்காக நாளை மாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதரி தீபாராதனை வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார். பின்பு சுவாமி

மேல் சாத்தப்பட்டுள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை முதல் நிர்மால்ய பூஜை, நெய் அபிஷேகம், உள்ளிட்டவை நடைபெறும்.

பின்பு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். சித்திரை ஆட்ட திருநாளுக்காக ஒருநாள் மட்டுமே கோயில்திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவ. 16ம் தேதி கோயில் நடைதிறக்கப்படும்.

தற்போதுள்ள மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதரியின் பதிவு காலம் முடிவடைய உள்ளதால் இந்த சித்திரை ஆட்ட திருநாளுடன் இவரது பூஜை நிறைவு பெற உள்ளது. வரும் கார்த்திகை மாத திறப்பின் போது நவ.16ல் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நம்பூதரியிடம் சாவியை ஒப்படைத்து விடை பெறுவார் என்று தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்