தமிழ்மொழி அழகானது; தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள்: ட்விட்டரில் பிரதமர் மோடி புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை

மாமல்லபுரம் கடற்கரை குறித்து தமிழில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடி, ‘தமிழ்மொழி அழ கானது; தமிழ் மக்கள் தனித்துவ மானவர்கள்’ என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்ல புரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இம்மாதம் 11, 12 ஆகிய 2 நாட்கள் சந்தித் துப் பேசினர். பிரதமர் மோடி கோவளத்தில் 12-ம் தேதி காலை கடற்கரையோரம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கட லின் அழகை வர்ணித்து கவிதை ஒன்றை இந்தியில் எழுதி னார். அந்தக் கவிதையை நேற்று முன்தினம் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

தமிழில் பிரதமர் மோடி வெளியிட்ட கவிதையை பலரும் பாராட்டினர். திரைப்பட இயக்குநர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் அன்பு மற்றும் எங்கள் மொழிக்கு அவர் அளிக்கும் ஆதரவை நாங்கள் நிச்சயம் கொண்டாடுகிறோம். மிக்க நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித் துள்ள பிரதமர் மோடி,‘உலகின் மிகவும் தொன்மையான, மிகவும் துடிப்பான கலாச்சாரத்தை வளர்த் துள்ள மொழியில் எனது எண் ணங்களை வெளிப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். தமிழ் மொழி அழகானது. அதேபோல் தமிழ் மக்களும் தனித்துவமான வர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விவேக், ‘இயற்கையை வணங்குவது, இறைவனை வணங்குவதைப் போன்றது. ஏனென்றால் இயற்கை தான் கடவுள். மாமல்லபுரம் கடற் கரை குறித்து அழகான கவிதை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை நாட்டின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், ‘நடிகர் விவேக்குக்கு எனது நன்றி. இயற்கைக்கு மதிப்பளித்தல் என்பது நமது பண்பாட்டில் முக்கிய மான கூறாகும். இயற்கை தெய் வீகத்தையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் அதிகாலையின் அமைதி ஆகி யவை எனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான சரியான நேரமாக அமைந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்