புதுச்சேரி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரம்; 56.16% வாக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி

காமராஜர் நகர் இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 32 வாக்குச்சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரம் இத்தொகுதியில் அமைந்துள்ள 32 வாக்குச்சாவடிகளிலும் உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 158 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 56.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 35,009 வாக்காளர்களில் 19,661 வாக்குகள் பதிவாகியுள்ளன.

செ.ஞானபிரகாஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்