கேன் குடிநீரின் தரத்தை அறிந்து கொள்வது எப்படி? - நுகர்வோருக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவை

தமிழகத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை மிகப்பெரிய வர்த்தகமாக மாறியிருக்கிறது. கோவையில் மட்டும் 69 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல் பட்டுவருகின்றன. கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்ய வேண்டுமானால், இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து ஐஎஸ்ஐ தரச் சான்று மற்றும் உணவு பாதுகாப்புத்துறையிடமிருந்து உரிமத்தை பெறுவது கட்டாய மாகும். ஒவ்வோர் ஆண்டும் அந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். எனினும், சிலர், உரிமம் பெறாமல் தரமற்ற குடிநீரை விற்பனை செய்வதாக புகார்கள் எழுகின்றன. இதைத்தடுக்க, அவ்வப் போது குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: பெரும் பாலான குடிநீர்நிறுவனங்கள் நிலத்தடி நீரைத் தான் முக்கிய நீராதாரமாக கொண் டுள்ளன. எனவே, அளவுக்கு அதிக மான காப்பர், இரும்பு, அலுமினி யம், குளோரைடு போன்றவற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடிநீரைப் பருகினால், வாந்தி, உயர் ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். மேலும், நச்சுப் பொருட்களான கேட்மியம், பாதரசம் போன்றவை குடிநீரில் கலந்திருப்பின் அவை மூளை, நுரையீரல், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் கேன்கள் தயாரிக்கும் நிறுவனங் கள் வேதிப்பொருட்கள் அளவை சரி செய்து விதிமுறைப்படி விற்பனை செய்ய வேண்டும்.தரமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய மக்களிடையேயும் போதிய விழிப்புணர்வு அவசியம். குடிநீர் கேன்களை வாங்கும்போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, தயாரிப்பு தேதி, பேட்ச் எண், ஐஎஸ்ஐ முத் திரை ஆகியவை லேபிளில் உள் ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும், அழுக்கு படிந்த நிலையில் உள்ள கேன்களை வாடிக்கையாளர்கள் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் எந்தவித கீறல்களும், சேதமும் இல்லாமல் குடிநீர் கேன்கள் இருக்க வேண்டும். கேனின் ஒருபுறத்திலிருந்து பார்த்தால் மறுபுறம் தெளிவாக தெரிய வேண்டும். கேன் குடிநீரின் மூடியில் தயாரிப்பு தேதி, பேட்ச் ஆகியவற்றை தயாரிப்பாளர்கள் கட்டாயம் லேசர் பிரிண்ட் செய்திருக்க வேண்டும்.

சூரிய ஒளி படக்கூடாது

குடிநீர் கேன்களின்மீது நேரடி யாக சூரிய ஒளி படும்போது நீரின் தன்மை மாறிவிடும். எனவே, விற்பனைக்காக கொண்டு செல்லும்போது சூரிய ஒளி படும்படி திறந்த வாகனத்தில் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு திறந்த வாகனத்தில் கொண்டு சென்றால் அந்த வாகனத்தோடு கேன்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல, கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்போரும் கேன் குடிநீரின்மீது சூரியஒளி படாதவாறு வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் தரமற்ற குடிநீரை விற்பனை செய்வது தெரியவந்தால் உணவுபாதுகாப்புத்துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும். சம்மந்தப்பட்ட விற்பனையாளர், தயாரிப்பாளர் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து நடவடிக்கையின் விவரம் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்