தெருவிளக்குகள் எரியாததால் பல இடங்களில் இருளில் மூழ்கிய மதுரை: பராமரிப்பை மாநகராட்சி ‘அவுட்சோர்சிங்’கில் விட்டதால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு ‘அவுட் சோர்சிங்’கில் (ஒப்பந்த சேவை அமர்த்தும் முறை)விடப்பட்டுள்ளது. எரியாத தெருவிளக்குகளை பழுதுநீக்கும் பணி தாமதமடைவதால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 53 ஆயிரம் தெருவிளக்குகள் உள்ளன. இதில் 31 ஆயிரம் தெருவிளக்குகள் பழைய 72 வார்டுகளிலும், 22 ஆயி ரம் விளக்குகள் புதிதாக இணைந்த 28 வார்டுகளிலும் அமைந்துள்ளன.

புதிதாக இணைந்த 28 வார்டுகளில் உள்ள பழைய ‘டியூப் லைட்’ தெருவிளக்குகள் அனைத் தும் கடந்த ஆண்டே ‘எல்இடி’ பல்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. இதன் பராமரிப்புப் பணி, எல்இடி பல்புகளை பொருத்திய தனியார் நிறுவனத்திடமே ஒப்படைக் கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக் கும் அவர்களுக்கே பராமரிப்பு பணி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பழைய 72 வார்டுகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் அனைத்து தெருவிளக்குகளையும் எல்இடி பல்புகளாக மாற்றும் பணி தற்போது நடக்கிறது.

இந்த 72 வார்டுகளில் ‘அவுட் சோர்சிங்’ முறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் தெருவிளக்கு பரா மரிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சியிடம் பராமரிப்புப் பணி இருந்தவரை, தெருவிளக்கு பழுதுகள் ஓரளவுக்கு விரைவாக நடந்தன. அதை ஒப்பிடும்போது ஒப்பந்தப் பணியாளர்களின் பராமரிப்பு சரியாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. தாங்கள் தெரிவிக்கும் தெருவிளக்கு பழுது தொடர்பான புகார்கள் மீது ‘அவுட்சோர்சிங்’ மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகள் தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்கியுள்ளன. இங்கு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

பல வார்டுகளில் எல்இடி பல்புகள் பொருத்திய சில நாட்களிலேயே பழுதடைந்து எரியாமல் உள்ளன. தரமற்ற எல்இடி பல்புகள் பொருத்தியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 75, 76-வது வார்டுகளில் 30-க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன.

முன்பு தெருவிளக்கு பணி நடந்தபோது மின் ஊழியர்களை அழைத்து சென்று அப்பகுதி டிரான்ஸ்பார்மரிலிருந்து இணைப்பைத் துண்டித்துவிட்டு பணி மேற்கொண்டனர். ஆனால், தற்போது தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ‘அவுட் சோர்சிங்’ ஊழியர்கள் சரியாக பணி செய்யாததால் அடிக்கடி தெருவிளக்குகள் பழுதடைகின்றன என்று கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, தற்போது பலத்த காற்று வீசுவதாலும், மழை பெய்வ தாலும் தெருவிளக்குகள் அடிக் கடி பழுதடைகின்றன. அவை உடனுக்குடன் சரி செய்யப்படுகின் றன என்று கூறினர்.

குவியும் தெருவிளக்கு பழுது புகார்கள்

100 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 24 மணி நேர மையம் செயல்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் மொபைல்போன் மூலம் வரும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு ஊழியர்களின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் மாநகராட்சி ஆணையாளருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மையத்துக்கு பெரும்பாலும் தெருவிளக்கு தொடர்பான புகார்களே வருகின்றன. கடந்த மாதம் இந்த மையத்துக்கு மொத்தம் 1,754 புகார்கள் வந்ததில், தெருவிளக்கு பழுது தொடர்பாக மட்டுமே 653 புகார்கள் வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்