கோமாரி தடுப்பூசி முகாம் அக்.14 முதல் தொடக்கம்: தமிழகம் முழுவதும் 95 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு

By செய்திப்பிரிவு

பெ. ஜேம்ஸ்குமார்

செங்கல்பட்டு

கால்நடைகளுக்கு கோமாரி தடுப் பூசி முகாம் தமிழகத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இதில் 94 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் 63 வகை யான வைரஸ் கிருமிகளால் பரவு கிறது. மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக் கூடியது. நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக் கிலும், கால் குளம்புகளுக்கு இடை யிலும் புண்கள் ஏற்படும்.

இதனால் பால் கறவை குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். எனவே, இந்நோய் தாக்காமல் இருப் பதற்கு மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போடுவதே சிறந்த நிவாரணம்.

இந்நிலையில் தேசிய கோமாரி தடுப்பூசி திட்டத்தின்கீழ், தமிழகத் தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வரும் 14-ம் தேதி முதல் நவ. 22 வரை கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், 95 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 46 ஆயிரம் பசு, எருமை இனங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதுகுறித்து கால்நடை பரா மரிப்பு துறை உதவி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:

தேசிய கோமாரி தடுப்பூசி திட்டத்தின்கீழ், கடந்த 2011 ஜூலை யில் தொடங்கப்பட்டு இதுவரை 16 சுற்றுகளாக தடுப்பூசி போடும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது, தமிழகம் முழுவதும், கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் 17-வது சுற்று நடைபெறவுள்ளது.

இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராம ரிப்பு உதவியாளர்களைக் கொண்ட தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன.

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங் களிலேயே கோமாரி நோய் தடுப் பூசி போடும் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன.

எனவே, விவசாயிகள் 3 மாதங் களுக்கு மேற்பட்ட கன்று, பசு, எருது, எருமை ஆகிய கால்நடை களை முகாமுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்