பாதாள சாக்கடை பராமரிப்புக்கு சிறப்பு பிரிவு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தொற்றுநோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை பிரத்யேகமாக கவனிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக சிறப்பு பிரிவை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது மயிலாடுதுறையில் கடந்த 2003-ம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.39 கோடி செலவில் தொடங்கப்பட்டு 2006-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான அறிவிப்பு, ஒப்பந்தம் என அனைத்துப் பணிகளையும் தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம்தான் மேற்கொண்டது. இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்தது. அதன்பிறகு பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கான பொறுப்பு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

பாதாள சாக்கடை தொடர்பான பிரச்சினைகளை கையாள திறமை யான, தகுதியான ஊழியர்கள் நகராட்சி யில் நியமிக்கப்படுவது இல்லை. இதனால் மயிலாடுதுறை நகராட்சியில் தொற்றுநோய்க் கிருமிகள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக வும், கழிவுநீரை முறையாக அப் புறப்படுத்தவும் மத்திய, மாநில அரசு கள் கோடிக்கணக்கான நிதியை ஆண்டுதோறும் செலவிட்டு வருகின் றன. ஆனால், தமிழகம் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப் பட்ட பாதாள சாக்கடைத் திட்டங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக் கும் வகையில் உள்ளன. பாதாள சாக்கடைத் திட்டத்தின் பராமரிப்பு அந் தந்த நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வசம் ஒப்படைக்கப் பட்ட பிறகு முறையான பராமரிப்பு இல்லை.

எனவே, பாதாள சாக்கடைத் திட்ட பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப் புகளில் செயல்பாட்டில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்தவும், பிரச்சினைகளுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்து அவற்றை சரிசெய்யவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பாதாள சாக்கடைத் திட்ட பராமரிப்புக்கென தனியாக சிறப்புப் பிரிவை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி ஆகி யோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.வைத் தியலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக நகராட்சி நிர் வாகத் துறை செயலர் மற்றும் ஆணை யர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நவம்பர் 5-ம் தேதிக் குள் பதிலளிக்க வேண்டும் என கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

41 mins ago

சுற்றுலா

53 mins ago

கல்வி

10 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்