வடகிழக்கு பருவமழை அக். 3-வது வாரம் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களில் 970 மீ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 10 சத வீதம் அதிகமாகும். தமிழகத் தில் மட்டும் 16 சதவீதம் கூடுத லாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தாக்கம் ஓய்ந்துவிட்டதை யடுத்து தற்போது ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்றின் தாக்கம் உயர்ந்துள்ளது.

இதனால் இனிவரும் நாட் களில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் குறைவுதான். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பெரும் பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மாத இறுதி யில் தமிழகம் முழுவதும் பரவ லாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திரு நெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், கோவை, தூத்துக் குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. எனினும், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட் களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும். மாநிலத்தில் வெப்பநிலையும் சற்று அதிகமாக காணப்படும்.

மேலும், அக்டோபர் 4-ம் தேதி திருச்சி, சேலம் உட்பட மத்திய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3-வது வாரத் தில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படு கின்றன என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்