அண்ணா சாலை சாந்தி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளை நிறுத்த வேண்டும்: மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பயணிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை 

அண்ணா சாலையில் மீண்டும் இருவழியாக பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகு அண்ணா சாலை சாந்தி பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலான சாதாரண கட்டணபேருந்துகள் நிறுத்தாமல் இயக்கப்படு வதால், பயணிகள் அவதிப்படு கின்றனர்.

எனவே, இந்த இடத்தில் அனைத்து சாதாரண பேருந்து களையும் நிறுத்தி இயக்க நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பய ணிகள் வலியுறுத்தியுள்ள னர்.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை யில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 52 வழித்தடங்களில், நாளொன் றுக்கு 256 பேருந்துகள் வாயி லாக 2,963 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாந்தி பேருந்து நிறுத் தம் முக்கியமானதாக இருக் கிறது.

மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது அண்ணாசாலையில் இரு வழியாக வாகனங்கள் இயக் கப்படுகின்றன. சாந்தி பேருந்து நிறுத்தத்தில் சாதாரண (வெள்ளை போர்டு) கட்டண பேருந்துகள் அனைத் தையும் நிறுத்தி இயக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான சாதாரண கட்டண பேருந்து கள் நிறுத்தாமல் இயக்கப் படுகின்றன. இதனால், பயணி கள் கடும் அவதிப்படுகின்ற னர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்தபோது, சிக்னல் அருகே தற்காலிகமாக பேருந்துகள் நிறுத்தி இயக் கப்பட்டன. தற்போது அண்ணா சாலையில் மீண்டும் இரு வழியாக பேருந்துகள் இயக் கப்படுகின்றன.

இந்நிலையில் பேருந்து களைப் பிடிக்க எல்ஐசி அருகே உள்ள நிறுத்தத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட் டுள்ளது. இது பயணிகளுக்கு கடும் சிரமத்தை தருகிறது. அத்துடன் மழைக்காலம் ஆரம்பித்தால் பயணிகள் பெரும் இன்னலை சந்திக்க நேரிடும்.

சாதாரண கட்டண பேருந்து

இதனால், பிராட்வேயில் இருந்து பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் சாதாரண கட்டண மாநகர பேருந்து களை சாந்தி நிறுத்தத்தில் நிறுத்தி இயக்க வேண்டும். ஆனால் 18 கே போன்ற சில பேருந்துகளை மட்டுமே இங்கு நிறுத்தி இயக்குகின்ற னர்.

ஆனால் 21, 26, 60, 51பி, 52 உள்ளிட்ட வழித்தட சாதாரண கட்டண பேருந்துகள் நிறுத்தாமல் இயக்கப்படு கின்றன.

இதனால், பயணிகள் அவதிப் படுகின்றனர். சுமார் ஒருகிமீ தூரம் சென்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாநகர போக்கு வரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்