இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்; முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம்: முதல்வர் பழனிசாமி

By செய்திப்பிரிவு



சேலம்
இடைத் தேர்தலில் அதிமுகவே போட்டியிடும் என முன்பே ஒப்பந்தம் செய்துள்ளோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சே‌லம் மாவட்ட ஆட்சியர் ராமன், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
பல்வேறு துறைகள் சார்பில் மேட்டூர் பகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகளில் முதல்முறையாக அதிமுக ஆட்சியில்தான் குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது.

அதிமுக அரசு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அதிமுக அரசின் மீது விமர்சனங்களை முன் வைக்கின்றனர். 2011 முதல் 2019 வரை பல திட்டங்கள் நிறைவேறியுள்ளன. நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘‘நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் எதிர்காலத்தில் மோசடிகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்களின் தொன்மை குறித்து ஐ.நா. வில் பிரதமர் மோடி பேசியதை பெருமையாகக் கருதுகிறேன்.

இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். கூட்டணிக்கட்சிகளின் ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறோம். இடைத் தேர்தலில் அதிமுகவே போட்டியிடும் என முன்பே ஒப்பந்தம் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்