பிழையாக கடிதம் எழுதிய சூர்யா ரசிகர்கள்: தமிழை யார் ‘காப்பான்’; மாணவர்களை கண்டு வருந்தும் ஆய்வாளர்

By செய்திப்பிரிவு

கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடந்த 21ம்தேதி திரைப்படத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேன்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர். அந்த கல்லூரி மாணவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார். மேலும், 'இனிமேல் இது போல செய்யமாட்டோம்' என கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு செல்லுமாறும் கூறியுள்ளார். கடிதம் எழுதி கொடுத்த கல்லூரி மாணவர்கள் 6 பேரும் தமிழை பிழையோடு எழுதி கொடுத்துள்ளனர்.

ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை 'ஆவ்யாளர்' என்றும் எழுதியிருப்பதை மனதை திடப்படுத்திக் கொண்டுதான் படித்தேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது என்று ஆய்வாளர் அம்பேத்கர், தனது ஃபேஸ் புக் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். "இந்தக் கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி பயிலும் மாணவர்கள். நிலைமை இப்படியே போனால், யார் 'காப்பான்' இவர்களையும், இவர்களின் தமிழையும்..!" என்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்