ஜெர்மன் வங்கியிடம் இருந்து வட்டியில்லா கடன் பெற்று 12 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்து வாங்க முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம்

ஜெர்மன் வங்கியிடம் இருந்து தமிழக அரசு வட்டியில்லா கடன் பெற்று 2 ஆயிரம் மின்சார பேருந்துகள், 12 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்துகள் வாங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்ட அரசு போக்கு வரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப் பலன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசுப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக் குநர் சேனாதிபதி வரவேற்றார். போக்குவரத்து செயலர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

விழாவில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், சமூக நல அமைச்சர் சரோஜா ஆகியோர் பேசினர். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் அரசு போக்குவரத் துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5,199 கோடி வழங்கப்பட்டது. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டு ஆட்சியின்போது ரூ.928 கோடி வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 6,253 பேருக்கு, ஓய்வூதியப் பலனாக மொத்தம் ரூ.1,093 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத் தில் 22 ஆயிரம் பேருந்துகள் மூல மாக, நாளொன்றுக்கு 1.75 கோடி பேர் பயணம் செய்கின்றனர். புதி தாக 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. புவி வெப்ப மயமாதலை தடுக்க சி-40 என்ற நிறுவனத்தில் கையெழுத் திட்ட முதல் முதல்வர் பழனிசாமி. இதன் மூலமாக, ஜெர்மன் வங்கி யிடம் இருந்து வட்டியில்லா கடனைப் பெற்று, 2 ஆயிரம் மின்சார பேருந்துகள், 12 ஆயிரம் பிஎஸ்-6 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக 325 மின்சார பேருந்துகளும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 500 மின்சார பேருந்துகள் என 825 மின்சார பேருந்துகள் தமிழகத்தில் இந்த ஆண்டு இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தான், மத்திய அரசு வழங்கும் 35 விருதுகளில் 11 விருதுகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டலத்தில் ஓய்வுபெற்ற 368 பேருக்கு ரூ.77.98 கோடியும், தரும புரி மண்டலத்தில் 235 பேருக்கு ரூ.43.94 கோடி என 603 பேருக்கு ரூ.121.92 கோடி ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்பட்டன.

விழாவில், சேலம் ஆட்சியர் ராமன், எம்பி சந்திரசேகரன், எம்எல் ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங் கோவன், போக்குவரத்துக் கழக கோட்ட துணை இயக்குநர் ஜீவரத் தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்