மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.3.32 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.3.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பிற்ப கலில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப்பதிவு ஆய்வுத் துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பத்திரப் பதிவு பணிக்காக ஏராளமான பொது மக்கள் காத்திருந்த நிலையில், திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான குழுவினர் சோதனையை தொடங்கினர்.

3 பெண் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலக கதவை மூடிவிட்டு அங்கு யாரேனும் இடைத்தரகர்கள் உள்ளனரா என விசாரணை நடத்தினர். அங்கிருந்த அலுவலர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. சோத னையில் கணக்கில் வராத ரூ.3.32 லட்சம் பிடிபட்டது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக மேட்டுப் பாளையம் சார்பதிவாளர் அருணாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங் களையும் பத்திரப்பதிவு ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவகலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்தச் சோதனை நடைபெற்றதாகவும், ஆய்வின் முடிவில் முழுமையாக தகவல்கள் தெரிய வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்