கொஞ்சம் கண் அசந்தால் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்: அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது சர்வாதிகாரம் தலைதூக்கும் நேரத்தில் ஜனநாயகக் குரல் எழுப்பும் நேரமிது என்றார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:

“திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது, தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. ரெயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நம்முடைய போராட்டங்களின் முன்னணி போர் வாள் வைகோ. திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம்.

தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார்” என்றார் மு.க.ஸ்டாலின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்