தமிழகம் முழுவதும்60 லட்சம் மாணவ, மாணவியருக்கு தொண்டை அடைப்பான் தடுப்பூசி: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகம் முழுவதும் 60 லட்சம் மாணவ, மாணவியருக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்கு நர் டாக்டர் க.குழந்தைசாமி தெரி வித்தார்.

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக் குப் பின்னர் சென்னை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வயதுக்கு உட் பட்ட குழந்தைகள், சிறுவர்கள் பலர் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற் றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த சில சிறு வர்கள் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழக்கமான காலத்தில் போடும் தடுப்பூசியுடன் கூடுதலாக இருநோய் (தொண்டை அடைப்பான், ரண ஜென்னி) தடுப் பூசி போடும் பணியை கடந்த மாதம் சுகாதாரத் துறை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருத் துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியது:

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன் றரை மாதம்,16 மாதம், 5 வயது, 10 வயது, 15 வயதில் வழக்கமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின் றன. தற்போது தொண்டை அடைப் பான் நோய் பாதிப்புள்ள பகுதி களில் 1 முதல் 12-வது படிக்கும் மாணவ, மாணவியருக்கு கூடுதலாக இருநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் 5-வது மற்றும் 10-வது படிக்கும் மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இது வரை சுமார் 60 லட்சம் மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இன்னும் 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொண்டை அடைப்பான் நோயைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்நோய்க்கு தேவையான மருந் துகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

31 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்