சென்ட்ரல் அருகே ரயில்களில் தொடரும் கொள்ளைகள்: போலீஸாரின் எல்லை பிரச்சினையால் நடவடிக்கை இல்லை

By ஆர்.சிவா, கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பேசின்பிரிட்ஜ், கொருக்குப் பேட்டை ரயில் நிலைய பகுதியில் வரும்போது அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினமும் ஹவுரா எக்ஸ் பிரஸ் ரயிலில் கப்பல் படை அதிகாரி உட்பட 3 பேரை தாக்கி கொள்ளை யடித்து சென்று விட்டனர்.

கடந்த 3 மாதங்களில் நடந்த 4-வது சம்பவம் இது. இத்தனை சம்பவங்கள் நடந்த பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

எல்லை பிரச்சினை

ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் களில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் (ஆர்பிஎப்) தான் நடவடிக்கை எடுப் பார்கள். ரயில்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து இவர்களே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த கொள்ளை சம்பவம் குறித்தும் கொருக்குப்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படையினர்தான் வழக் குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிக்கூட விசாரணை நடத்துவதில்லை. காரணம் கேட் டால் அது எங்கள் வேலை இல்லை என்று சாதாரணமாக சொல்கின்ற னர். ஆர்பிஎப் போலீஸாரிடம் வழக்கு இருப்பதால் தமிழக ரயில்வே போலீஸாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. ஊடகங் களில் பெரிய அளவில் செய்திகள் வெளியான பிறகே இருவரும் இணைந்து ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

அதிக கொள்ளை ஏன்?

எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவதற்கு பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை ரயில் நிலை யங்கள்தான் நுழைவு வாயில். சென்ட்ரல் நிலையத்துக்குள் ரயில் கள் வந்து நிற்பதற்கான நடைமேடை களை ஒதுக்குவதற்கு காலதாம தம் ஏற்படுகிறது. இதனால் பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படு கின்றன அல்லது மெதுவாக இயக் கப்படுகின்றன. கொள்ளையர் களுக்கு இதுவே வசதியாகி விடுகிறது.

பேசின்பிரிட்ஜ், கொருக்குப் பேட்டை ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இங்கிருந்து வரும் கொள்ளையர்கள் ரயில்களில் கொள்ளையடித்துவிட்டு, குடியிருப்பு பகுதிக்குள் சென்று மறைந்து கொள்கின்றனர். இதனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

5, 6-வது பாதை

இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் வழியில் அமைக்கப்பட்டு வரும் 5, 6-வது தண்டவாள பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இந்த பாதைகள் அமைக்கப்பட்டால், கொருக்குப்பேட்டை மற்றும் பேசின்பிரிட்ஜ் அருகே விரைவு ரயில்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற் படாது. மேலும், விரைவு ரயில் களுக்கான நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

ஆயுதம் ஏந்திய போலீஸ்

ரயில்வே பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் இடையே நேற்று முன்தினம் நடந்த கொள்ளை சம்ப வத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் நடந்து வரும் ரயில்வே பணிகள் முடி வடைந்தவுடன் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். அப்பகுதியில் வரும் கொள்ளையர்கள் கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை பயன் படுத்துகின்றனர். எனவே, அப்பகுதி யில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் காலை வரையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நிரந்தரமாக அங்கு நிறுத்தப்படுவார்கள். இதுதவிர சீருடை அணியாத போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

56 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்