மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்: கமல்ஹாசன் 

By செய்திப்பிரிவு

சென்னை

மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவரும், கல்வியாளரும், தத்துவ ஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்துக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கையடக்கத் தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

க்ரைம்

8 mins ago

சினிமா

23 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்