தமிழகம் முழுவதும் 24,890 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன: 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 24 ஆயிரத்து 890 பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து, அருகே உள்ள நீர் நிலைகளில் கரைப்பது வழக் கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பிரமாண்ட வடிவில் விதவிதமான வடிவில் 24,890 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் காலையி லேயே விநாயகர் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சென்னையில் மட் டும் 2,642 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த சிலைகள் கடல், ஆறு மற்றும் ஏரிகளில் கரைக்கப்பட உள்ளன.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீஸார் உட் பட பல்வேறு சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீஸாரும் ரகசிய பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர். ஒரு விநாயகர் சிலைக்கு ஒரு போலீஸ்காரர் என்ற ரீதியில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகளுக்கு தின மும் காலை, மாலை என இரு வேளைகளில் பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. வழிபாடு முடிந்த பிறகு, குறிப்பிட்ட நாட் களில் சிலைகள் ஊர்வலமாக எடுத் துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. சென் னையில் 5, 7, 8-ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற இடங்களில் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ள நாட்களில் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இதற்காக அனைத்து முன்னேற் பாடுகளும் செய்யப்பட்டு வரு கின்றன. சிலைகளைக் கரைக் கும் இடங்களில் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத் துவ குழுக்கள் உள்ளிட்ட பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப் படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

29 mins ago

தமிழகம்

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

32 mins ago

தொழில்நுட்பம்

23 mins ago

மேலும்