உடையாளூரில் ராஜராஜ சோழன் அகழாய்வுக் கூடம் அமைக்க கோரிக்கை: 2020 மார்ச் 20-க்குள் கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்படும்: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்

வரும் 2020 மார்ச் 20-ம் தேதிக்குள் கீழடியில் அருங்காட்சியகம் திறக் கப்படும் என்றும், உடையாளூரில் ராஜராஜ சோழன் அகழாய்வுக் கூடம் அமைக்க மத்திய தொல்லி யல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த திருப்பனந் தாளில் அறிவியல் வளர்ச்சி இயக் கத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இயக்கத்தின் நிறுவனர் டி.பாண்டு ரெங்கன் தலைமை வகித்தார். திருப் பனந்தாள் காசி மட இளைய அதிபர் திருஞான சம்பந்த சுவாமிகள், முன் னாள் எம்பி ஆர்கே.பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் யோகா நூலை வெளியிட்டதுடன், சிறந்த ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசு வழங்கிய அமைச் சர் க.பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கீழடியில் இதுவரை 142 அக ழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கீழடி உலக பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது. இதற்குக் கார ணம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகம்தான் சிறந்தது என நினைத் துக் கொண்டிருக்கும் வேளையில், கீழடி வைகை ஆற்றங்கரையின் மிகப் பெரிய நகர்ப்புற நாகரிக மாக விளங்கியுள்ளது என்பதை அகழாய்வு உணர்த்துகிறது.

கீழடி ஆய்வில் முதல் முறையாக புவி ஈர்ப்பு விசை மூலம் பூமிக்கு அடியில் உள்ள கட்டமைப்புகளைக் துல்லியமாகக் கண்டறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டிய இடத்தைக் கண் காணித்து அங்கு மட்டும் ஆய்வுகள் மேற்கொள்ள எளிதாக உள்ளது. இதுவரை 19 இடங்களில் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கீழடி ஆராய்ச்சி களைக் கொண்டு செல்ல வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொல் லியல் துறை மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்த தொலைநோக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் 2 மாதங்களில் முடி வடைந்து விடும். அங்கு அருங்காட்சி யகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக, மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்டுள்ளோம். 2020-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதிக்குள் அங்கு அருங் காட்சியகம் திறக்கப்படும்.

ஓலைச்சுவடி, கல்வெட்டு

ஒருங்கிணைந்த டெல்டா மாவட் டங்களில்தான் அதிக அளவில் ஓலைச் சுவடிகளும், கல்வெட்டு களும் கிடைத்துள்ளன. இதுவரை, ஒன்றரை லட்சம் ஓலைச்சுவடிகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சா வூர் மாவட்டம் உடையாளூரில் பதிவு செய்யப்பட்டு மத்திய தொல் லியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள ஆய்வின் முடிவு இந்தாண்டு இறுதிக் குள்ளாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடையாளூரில் ராஜ ராஜன் சோழன் அகழாய்வுக் கூடம் மற்றும் மணிமண்படம் ஏற்படுத்த மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 secs ago

தமிழகம்

15 mins ago

ஓடிடி களம்

36 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

3 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்