புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது; அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி மாநில 2019 -20 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என கூறி சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தின் 2019 -20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் இன்று (ஆக.26) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த ஆளுநர் கிரண்பேடிக்கு காவலர்களின் மரியாதை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றார். பேரவை கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக , அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையை தொடங்கியதுமே கடந்த 3 ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என கூறி ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், "மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு துணைநிலை ஆளுநர் மீது குறை கூறி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்", என, தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

11 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

56 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்