விஞ்ஞானிகளின் சிறு குழு 15 ஆயிரம் உறுப்பினர்களுடன் பெரும் அமைப்பாக விரிவு; தமிழகத்தில் அறிவியலைப் பரப்பும் பணியில் ஒரு மக்கள் இயக்கம்: 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது

By செய்திப்பிரிவு

வி.தேவதாசன்

சென்னை

அறிவியல் கொள்கைகள், தத்துவங் களை பற்றி விவாதம் நடத்து வதற்காக சில விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சிறு குழுவா னது, தற்போது 15 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் இயக்கமாக விரிவடைந்துள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தின் கிராமப்புறங்களில் தொலைநோக்கிகளுடன் (Tele scope) அறிவியல் ஆர்வலர்கள் இரவு நேரங்களில் சுற்றி வந் ததை பலர் பார்த்திருக்கக் கூடும். படிப்பறிவில்லாத குடிசை மக்க ளும் தொலைநோக்கி மூலம் பல வான்வெளிக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

குறிப்பாக, நிலவின் தரைப் பகுதி களையும் சனிக்கிரகத்தின் வண்ண மயமான வளையங்களையும் வியாழன் கோள் மற்றும் அதன் நிலவுகளையும் கண்டு கிராம மக்கள் பரவசம் அடைந்தனர். நழுவுப் படக் காட்சிகள் (Slide show) மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மனிதகுல தோற் றம் பற்றியெல்லாம் மிக எளிய முறை யில் அறிவியல் உரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதே காலகட்டத்தில் ‘துளிர்’ என்ற சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ், எளிய அறிவியல் கட்டுரைகளோடு வெளிவந்தது. துளிரின் வாசகர் வட்டங்களாக தமிழ் நாடு முழுவதும் ‘துளிர் இல்லங்கள்’ தோன்றின.

பள்ளி வகுப்பறைகளில் அறிவியல் போதிக்கும் முறைக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், விளையாட்டுகள், பாடல்கள், கதைகள் மூலம் அறிவியலை போதிக்கும் இடங்களாக துளிர் இல்லங்கள் திகழ்ந்தன.

விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார், நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன என்பது போன்ற கேள்வி களையே விநாடி-வினா போட்டி களில் கேட்ட மாணவர்களுக்கு, பூரி உப்புவது ஏன், தோசை சுடும் போது சிறு துளைகள் உருவாவது எப்படி, மலைகளில் ஏறும்போது காது வலிப்பது ஏன் போன்ற கேள்விகள் துளிர் இல்ல விநாடி-வினா போட்டிகளில் கேட்கப்பட்டன. அறிவியலை மிகவும் சுவாரசியமான முறையில் கற்பிக்கவும் கற்கவும் முடியும் என்பதை அறிந்து துளிர் இல்லங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்தனர்.

சூழலியலை பாதுகாக்க வேண் டும்; அறிவியலை ஆக்க சக்திக்கும் அமைதிப் பணிகளுக்கும் பயன் படுத்த வேண்டும்; அறிவியல் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தப் பட வேண்டும்; அறிவியல் தொழில் நுட்பத்தின் பலன்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் போன்ற நோக்கங்களுக்காக 1980-ம் ஆண்டு, ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ (டிஎன்எஸ்எப்) உருவாக் கப்பட்டது. மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் அறிவியல் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடக்கத்தில் சென்னை ஐஐடி, சென்னை கணித அறிவியல் கழகம் போன்ற இடங்களில் பணியாற் றிய சில விஞ்ஞானிகள், பல்கலைக் கழகங்களின் சில பேராசிரியர் களைக் கொண்ட சிறு குழுவாகவே இந்த அமைப்பு உருவானது. இந்த அமைப்பை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த கணித அறிவியல் கழக முன்னாள் விஞ் ஞானி டி.ஆர்.கோவிந்தராஜன், சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலை வர் வி.முருகன் ஆகியோர் கூறும் போது, “தொடக்க காலங்களில் அறிவியல் கொள்கைகள் பற்றிய சொற்பொழிவுகளை, விவாதங் களை சிறு அரங்கக் கூட்டங்களில் நடத்தும் குழுவாகவே செயல்பட் டோம்.

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்குப் பிறகு சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்தி 1987-ம் ஆண்டு அகில இந்திய மக்கள் அறிவியல் கலைப்பயணம் நடை பெற்றது. தமிழகத்திலும் பல பகுதிகளுக்கு இந்த கலைக் குழு சென்றது. கலைக் குழு சென்ற இடங்களிலெல்லாம் அறிவியல் இயக்க அமைப்பு உருவானது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் அமைப்பில் சேர்ந்தனர்” என்று தெரிவித்தனர்.

அதன் பிறகே துளிர் இதழ் வெளி வரத் தொடங்கியது. துளிர் இல் லங்கள் உருவாயின. தொலை நோக்கி, நழுவுப் படக்காட்சி பிரச் சாரங்கள் நடைபெற்றன. அவ்வப் போது நிகழும் சூரிய கிரகணம் போன்ற அரிய வானியல் நிகழ்வு களை பாதுகாப்புடன் கண்டுகளிப் பது பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.

1990-களில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட எழுத்தறிவு இயக்கம் (அறிவொளி இயக்கம்), அறிவியல் இயக்கத்தை மேலும் பரவலாக்கியது. அதேபோல் மத்திய அரசால் 1993-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை, தமிழகத்தில் அறிவியல் இயக்கம் செயல்படுத்தி வருகிறது.

நம் சுற்றுப்புறங்களில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை அறிவியல் வழிமுறைப்படி கண்ட றிந்து ஆய்வறிக்கை தயாரிக்கின் றனர். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப் பிக்கும் மாநாடுகள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளில் ஆய்வு மாண வர்களும் அவர்களுக்கு வழிகாட்டி களாக ஆசிரியர்களும் பெருமள வில் கலந்து கொள்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A பிரிவில் குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி பல்வேறு வரையறைகள் உள்ளன. அவற்றில், நாட்டு மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும் நம் கடமைகளில் ஒன்று என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வலி யுறுத்தும் இந்த கடமையை நிறை வேற்றும் வகையில் மக்களிடையே அறிவியல் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அறிவியல் இயக்கத்தில் தற்போது 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ அமைப்பில் பணியாற்றும் த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை கணித அறிவியல் கழகத்தில் பணி யாற்றும் ஆர்.ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள், பொரு ளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத் ரேயா, பேராசிரியர்கள் அருணந்தி, எஸ்.மாடசாமி, பி.ராஜமாணிக்கம், சசிதரன், என்.மணி, எஸ்.மோகனா, உதயன், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தாமஸ் ஃபிராங்கோ, சி.ராமலிங்கம், பள்ளி ஆசிரியர் களான ஜெ.கிருஷ்ணமூர்த்தி, அ.அமலராஜன், அறிவியல் பிரச் சாரகர்களான எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், எஸ்.டி.பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் இந்த அமைப்பின் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

விரைவில் 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த அமைப்பின் 20-வது மாநில மாநாடு அண்மையில் திருப்பூரில் நடந்து முடிந்தது. அடுத்த 2 ஆண்டு களுக்கான அமைப்பின் தலைவ ராக முனைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளராக எஸ்.சுப்பிரமணி, பொருளாளராக ஆர்.ஜீவானந்தம், புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 mins ago

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

23 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்